56 inch Modi Ji Thali :மோடி பிறந்தநாளுக்கு வாருங்கள்: இரவு உணவு சாப்பிட்டு ரூ. 8.5 லட்சம் பரிசை வெல்லுங்கள்

புதுதில்லியின் மோடி ரசிகர் உணவகம் ஆர்டர் (ARDOR 2.1) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்காக 56 அங்குல மோடி தாளியை தயார் செய்துள்ளது.

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் (PM Narendra Modi Birthday 2022) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பாஜக தலைவர்கள் உள்ளிட்ட மோடி ரசிகர்கள் வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த, பிரமாண்டமான முறையில் கொண்டாட வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மோடி ரசிகர் ஹோட்டல் ஒன்று பிரத்யேக தாளி (56 inch Modi Ji Thali) தயார் செய்துள்ளதால், அடுத்த பத்து நாட்களுக்கு மோடி ரசிகர்கள் இந்த ஸ்பெஷல் உணவை ரசித்து ருசிக்கும் வாய்ப்பை பெற உள்ளனர்.

புதுடெல்லியின் மோடி ரசிகர் உணவகம் ஆர்டர் (ARDOR 2.1) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்காக 56 அங்குல மோடி தாளியை தயார் செய்துள்ளது. இது தவிர இந்த தாளியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது (prize of Rs 8.5 lakh has been announced). குறிப்பாக, இந்த ஐம்பத்தாறு அங்குல தாளியில் காரம், இனிப்பு, கூட்டு, பொறியல் என மொத்தம் 56 வகை உணவுகள் இருக்கும், இதில் சைவம் மற்றும் அசைவ தாளிகள் கிடைக்கும்.

மேலும், செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 26 வரை இந்த ஐம்பத்தாறு இஞ்ச் தாளியில் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கேதார்நாத்திற்கு இலவச பயணம் செல்வதற்கான வாய்ப்பை வழங்க உள்ளது ஹோட்டல் நிர்வாகம். இந்த உணவை ருசிப்பவர்களில் இருவருக்கு கேதார்நாத் கோவிலுக்கு சென்று இலவச தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று உணவகத்தின் உரிமையாளர் சுவீத் கல்ரா (Suveet Kalra is the owner of the restaurant) தெரிவித்தார்.

இரவு உணவில் 20 வகையான கூட்டு, பல்வேறு வகையான ரொட்டிகள் மற்றும் பருப்பு, பொறியல், ஜாமூன், குல்பி ஆகியவை அடங்கும் என்று உணவகம் தெரிவிக்கிறது. சைவத் தாளி 2600 ரூபாயும், அசைவ தாளி 2900 ரூபாயும் (Veg Thali Rs 2600, Non Veg Thali Rs 2900). இந்த உணவை வெறும் 40 நிமிடங்களில் முடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 8.5 லட்சம் பரிசும் கிடைக்கும். இந்த உணவகம் முன்பு பாகுபலி தாளி மற்றும் புஷ்பா தாளி போன்ற சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. தற்போது பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள 56 அங்குல தாளி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.