Pregnant woman killed : டிராக்டர் மோதி கர்ப்பிணிப் பெண் கொலை

ஹசாரிபாக்: Pregnant woman killed in tractor collision : ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தின் மீட்பு முகவரால்டிராக்டர் மோதியதால் அதன் சக்கரத்தின் கீழ் சிக்கிய‌ கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இச்சாக் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட (Under Ichak Police Station) வியாழக்கிழமை நடை பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாற்றுத்திறனாளி விவசாயியின் மகள் மற்றும் அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே (District Superintendent of Police Manoj Ratan Sothe) செய்தியாள‌ர்களிடம் கூறியதாவது: டிராக்டரை மீட்க விவசாயி வீட்டிற்கு சென்ற போது, ​​நிதி நிறுவன அதிகாரிக்கும், விவசாயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அவரது மகளும் ஈடுபட்டதால், அந்த முகவர் டிராக்டரின் சக்கரத்தை அந்த பெண் மீது ஏற்றி உள்ளார். இதில் சிக்கி அந்த பெண் நசுங்கி பலியானார்.

இது குறித்து டிஎஸ்பி கூறுகையில், “மீட்பு முகவர், தனியார் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது (A case of murder has been registered against 4 people, including a rescue agent and a manager of a private financial institution) என்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கூறுகையில், மஹிந்திரா டிராக்டர் நிதி நிறுவன அதிகாரிகள் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது வீட்டிற்கு வந்தனர். “அந்த பெண் டிராக்டருக்கு எதிரே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைத அந்த முகவர் டிராக்டரி சக்கரத்தை அந்த பெண் மீது ஏற்றி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று அவர் கூறினார்.

டிராக்டரை மீட்டெடுப்பதற்காக பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை என்றும் ஹசாரிபாக்கின் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா (Anish Shah, Managing Director and Chief Executive Officer, Mahindra Group), இது தொடர்பான‌ அனைத்து அம்சங்களையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

“ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைந்துள்ளோம். ஒரு மனித சோகம் நிகழ்ந்துள்ளது. தற்போதுள்ள மூன்றாம் தரப்பு வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை நாங்கள் ஆய்வு செய்வோம்” என்று ஷா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெண் மீது டிராக்டர் ஏற்றிக் கொன்ற
வழக்கின் விசாரணைக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதி (He assured to support the investigation of the case) அளித்தார்.