DK Sivakumar hug Siddaramaiah : சித்தராமையாவை கட்டிப்பிடித்து வாழ்த்து கூற‌ டி.கே.சிவகுமாருக்கு, ராகுல்காந்தி அறிவுரை

பெங்களூரு: DK Sivakumar to hug and congratulate Siddaramaiah : மாநிலத்தில் பல நாட்களாக விவாதப் பொருளாக இருந்த சித்தராமையா திருவிழா புதன்கிழமை தாவணகெரேயில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமையின் பலத்தைக் காட்டுவதாக அமைந்தது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், நிகழ்ச்சியின் மேடையில் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் கை கோர்த்துக்கொண்டு நாங்கள் ஒன்றுதான் என போஸ் கொடுத்த வீடியோவை பார்த்தவர்கள் காங்கிரஸின் இரு துருவங்களும் ஒன்றாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை என்று அனைவரும் நினைக்கும்படி செய்துள்ளது. இப்படிப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களின் கொண்டாட்டத்திற்கான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோவை பார்த்தவர்கள் நமுட்டு சிரிப்பு சிரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநில காங்கிரஸில் அக்கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே பனிப்போர் (cold war between them) நிலவி வருகிறது. இருவருமே முதல்வர் பதவிக்கு குறி வைத்திருப்பதால், சித்தராமையா ஆரம்பத்தில் இருந்தே டி.கே.சிவகுமாரின் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், இருவரும் ஒரே கட்சியில் இரு துருவங்கள் போல அரசியல் செய்து வருகின்றனர். இது என்னுடைய கடைசி தேர்தல், எனக்கு முதல்வர் பதவி கொடுங்கள், நான் திறமையானவன் என்ற அர்த்தத்தில் சித்தராமையா மறைமுகமாக பேசி வருகிறார். எனக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்று டி.கே.சிவகுமாரும் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனாலும், ஆரம்பத்திலிருந்தே மறைமுகமாக சித்தராமையாவின் 75 பிறந்த நாளையொட்டி (On the occasion of Siddaramaiah’s 75th birthday) நடைபெற்ற சித்தராமையா திருவிழாவிற்கு டி.கே.சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் அந்த விழாவில் டி.கே.சிவகுமார் கலந்து கொள்வது சந்தேகம் என்று கூறப்பட்டது. ஆனால் சித்தராமையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது டி.கே.சிவகுமார் கலந்து கொண்டு சித்தராமையாவை கௌரவித்தார். அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு கூட்டுத் தலைமைக்கான குரலை ஒலித்தனர். இந்த வீடியோவை பார்த்த மக்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஒற்றுமையாக உள்ளனர் என்று நிம்மதி அடைந்தனர். ஆனால் வைரலான வீடியோ இந்த கொண்டாட்டத்தின் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் சித்தராமையா திருவிழாவில் டி.கே. சிவகுமார் கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் கட்சி மேலிடத்தின் அறிவுரையின்படி சித்தராமையாவை புகழ்ந்து பேசி, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், அமல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை புகழ்ந்து பேசினார். கட்சியில் தங்கள் இருவரிடையே எந்த பிளவும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக ஆட்சியை அகற்றிவிட்டு, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க உள்ளது என்றார். மேலும் சித்தராமையாவை கட்டிப்பிடித்து கௌரவித்தார். ஆனால், சித்தராமையாவை மரியாதையுடன் கட்டிப்பிடிக்கும் எண்ணம் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் கட்சியில் உள்கட்சி பூசல் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் மேடையில் இருந்த ராகுல் காந்தி, சித்தராமையாவை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்கும்படி டி.கே.சிவக்குமாருக்கு கை சைகை மூலம் (By hand gesture) ராகுல்காந்தி அறிவுறுத்தினார். டி.கே.சிவக்குமாருக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தவர்கள், ராகுல்காந்தியின் அறிவுறத்தலை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.