Commonwealth Games : ஆண்கள் கலப்பு பாட்மின்டன் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்

பர்மிங்ஹாம்: Commonwealth Games, Silver Medal for India in Men’s Mixed Badminton : காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்கள் கலப்பு பாட்மின்டன் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து பர்மிங்ஹாம் நகரில் நடைப்பெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பாட்மின்டன் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப் போட்டியில் மலேசியாவிடம் தோல்வி அடைந்ததால் வெள்ளிப்பதக்கம் பெற்றது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் புதன்கிழமை பாட்மின்டன் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப் போட்டியில் மலேசியாவிடம் 1-3 என்ற கணக்கில்தோல்வி அடைந்ததால் வெள்ளிப்பதக்கம் (Silver medal) பெற்றது. இதன் மூலம் கடந்த முறை இந்தியாவிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்த மலேசியா தற்போது அதனை மீட்டுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கணக்கில் போட்டிகளின் சுற்றை சமன் செய்தார்.

பளுதூக்கும் பிரிவில் ஆண்களுக்குகான பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத்சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் ஸ்நாட்ச் பிரிவில் 163 கிலோ பிரிவில் கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையைத் தூக்கி 3- வது இடம் பிடித்தார். மகளிருக்கான 87 கிலோ பிரிவில் இந்தியரான உஷா பன்னூர் மொத்தமாக 205 கிலோ தூக்கி 6-வது இடம் பிடித்தார். மகளிருக்கான 78 கிலோ எடை ஜூடோ பிரிவில் இறுதிப்போட்டியில் துலிகா மான் (Dulika maan) ஸ்காட்லாந்து வீராங்கனை ஜாரா அலிங்கனிடம் தோல்வியடைந்த நிலையில் இந்திய வீராங்கனை துலிகா மான் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். நகரில் நடைபெறும் காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜ‌ஸ்வின் ச‌ங்கர் (Indian player Tejaswin Shankar) வெண்கலப்பதக்கம் பெற்றார் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் 2.22 மீட்டர் தூரம் உயரம் தாண்டி மூன்றாம் இடத்தைப் பிடித்த சங்கர் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்தார் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை காண போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப்பை மூன்று சுற்றுகளில் வீழ்த்தி இந்திய வீரர் ச‌வுரவ் கோஷல் (Saurav Ghoshal) வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார். தனிநபர் ஸ்குவாஷ் பிரிவில் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் தொடரின் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜெரீன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக இந்த பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹெலன் ஜோன்ஸை நிகாத் ஜெரீன் வீழ்த்தினார்.இதனால் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

காமன்வெல்த் போட்டிகளில் 120 பதக்கங்களை பெற்று ஆஸ்தேரிலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 5 தங்கப் பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 7 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 18 பதக்கங்களை பெற்று 7-வது இடத்தில் உள்ளது.