Charal festival in Courtalam: குற்றாலத்தில் வரும் 5ம் தேதி முதல் சாரல் திருவிழா

தென்காசி: Charal festival starts on the 5th coming in Courtalam: குற்றாலத்தில் வரும் 5ம் தேதி முதல் 8 நாட்கள் சாரல் திருவிழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் (Tenkasi District Collector) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் சாரல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதன்வகையில் இந்த வருடம் சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாள் துவக்க விழா நிகழ்ச்சியாக மங்கள இசையுடன், நாட்டிய நிகழ்ச்சி, பரத நாட்டிய நிகழ்ச்சி, சப்தஸ்வரங்களின் சுகராகம் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.சூரி, திரைப்பட நடிகை செல்வி.ரம்யா பாண்டியன் (விஜய் டிவி புகழ்) ஆகிய நிகழ்ச்சிகளும், இரண்டாவது நாள் கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய திரைப்பட நடிகை செல்வி.ரம்யா நம்பிஷன் கலந்துகொள்ளும் சென்னை லக்ஷ்மண் சுருதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிறப்பு தொகுப்பாளராக திரைப்பட நடிகர் மற்றும் விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் சிறப்பு நிகழ்ச்சிகளும், மூன்றாவது நாளாக பளுதூக்குதல், வளுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டிகளும், யோகா போட்டிகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகர் .கான பாலா கலந்துகொள்ளும் நெல்லை வானவில் திரையிசைக் குழு வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நான்காவது நாள் நிகழ்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கான பலவித போட்டிகளும், படகு போட்டிகளும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய திரைப்பட நடிகை மற்றும் பிண்ணனி பாடகி செல்வி.ஆண்ட்ரியா கலந்துகொள்ளும் நெல்லை ஆனந்தராகம் இன்னிசை நிகழ்ச்சி, ஐந்தாவது நாள் நிகழ்ச்சியாக சைக்கிள் மாரத்தன், வில்வித்தை, மற்றும் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நட்ராஜன் வழங்கும் செந்தமிழ் ஆடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கேரள மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், ஆறாவது நாள் நிகழ்ச்சியாக கோலப்போட்டி, யோகாப்போட்டி, பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய நாகர்கோவில் கீதம் இசைக்குழுவினரின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சிகளும், எழாவது நாள் நிகழ்ச்சியாக மகளிர் மினி மாரத்தன், மேஜிக் விளக்கு அலங்காரப்போட்டிகளும், பல்வேறு பள்ளி மாணவ மாணவியர்களின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கர்நாடக மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் நிகழ்ச்சிகளும், விஜய் டிவி புகழ் நகைச்சுவை நடிகர் மதுரைமுத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும், திரைப்பட பாடகர் மற்றும் விஜய் டிவி புகழ்செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி கலந்துகொள்ளும் நெல்லை கஸ்தூரி திலகம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நிறைவு நாள் நிகழ்ச்சியாக பழைய கார்கள் அணிவகுப்பு நடைபெறுகிறது.

கல்லூரி மாணவ,மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், மற்றும் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் விமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்துகொள்ளும் சென்னை பரிமளாதேவி வழங்கும் இன்னிசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் சாரல் திருவிழாவில் கலந்துகொண்டு அனைத்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.