Rahul gandhi : மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுபட்டுள்ளனர்: ராகுல்காந்தி

Image Credit : Twitter.

தாவணகெரே: Congress united to defeat BJP in state : மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுபட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான‌ ராகுல்காந்தி எம்.பி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் புதன்கிழமை சித்தராமையாவின் 75 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தப்போது, வளர்ச்சிக்காக தொலை நோக்கு சிந்தனைகளோடு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்.


ஆனால் தற்போது மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக, அதற்கு நேர் எதிராக உள்ளது. பாஜக ஆட்சியில் மாநிலத்தில் மக்களிடையே வெறுப்பை விதைத்துள்ளது (BJP rule has sowed hatred among the people in the state). இதன் காரணமாக மக்கள் பிளவுபட்டு நிற்கின்றனர். பாஜக ஆட்சியில் மாநிலத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. பசவண்ணரின் தத்துவங்களுக்கு நேர் எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தின் மொழி கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. அனைத்து மொழிகள், கலாசாரம், பாரம்பரியங்கள் இந்தியாவை கட்டமைத்துள்ளது. ஆனால் பாஜக ஒரே தத்துவத்தை திணிக்க முயற்சிக்கிறது. கர்நாடகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தில் நல்லிணக்கம், அமைதி இருந்தால் தான் தொழில் வளர்ச்சி அடைய முடியும் (Industry can grow only if there is harmony and peace).

கர்நாடகத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுபட்டுள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது, தூய்மையான, ஊழலற்ற ஆட்சி வழங்கப்படும். பெங்களூரை உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆக்குவோம். ஏழைகளின் மேம்பாட்டிற்கும், வெறுப்பை பரப்பாத காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் அமையும்.இதற்கு மாநாட்டில் திரளாக திரண்டுள்ள மக்களே சாட்சியாக உள்ளனர் என்றார்.

இதனிடையே லிங்காயத்து சமுதாய பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை (Shivamurthy Muruga Saranaru) சந்தித்த ராகுல்காந்தி, அவருடன் நீண்ட நேரம் உரையாடினார். பீடாதிபதி ராகுல்காந்திக்கு இஷ்டலிங்க தீட்சையை செய்து வைத்தார். இதனையடுத்து ராகுல்காந்திக்கு முருகா சரணரு, விபூதியை பூசி கழுத்தில் இஷ்ட லிங்கத்தை அணிவித்தார். கர்நாடகத்தில் 2023- ஆம் ஆண்டு சட்டப்பேரவை நடைபெற உள்ளது. இதனால் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் லிங்காயத்து சமுதாய மக்களின் வாக்குகளை கவருவதற்காக ராகுல்காந்தி இஷ்டலிங்க தீட்சையை பெற்றதாக பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சித்தராமையாவின் 75 வது பிறந்த நாளில் சித்தராமையாவை, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வாழ்த்திவிட்டு விலகிச் சென்றார். அப்போது அவரை கைகளால் சைகை செய்து, சித்தராமையாவை கட்டி அணைத்து வாழ்த்து கூறுமாறு ராகுல்காந்தி தெரிவித்தார். இது வீடியோவில் வைரலாகியது. இதனையடுத்து, காங்கிரஸில் ஒற்றுமை உள்ளது போல காண்பிக்க இது போன்ற செயல்களில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் ஈடுபட்டுவதாக, பாஜகவினர் கிண்டல் செய்தனர். காங்கிரஸ் கட்சியினரும் மாநிலத்தை தற்போது தங்களுக்கு உள்ள பலத்தை காட்ட சித்தராமையாவின் பிறந்த நாளை பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் கட்சியில் பிளவு இருந்தாலும், ராகுல்காந்தி முன்னிலையில், சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் நடித்துள்ளனர்.