AIADMK head office key issue : அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முறையீடு

தில்லி: AIADMK head office key issue, Appeal by O. Panneerselvam in Supreme Court : அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கக் கூறி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். இதனையடுத்து அலுவலக சாலையில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களை தடுக்க முயன்று மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். இதனைய‌டுத்து, அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். பின்னர் அவர்களை போலீஸார் வெளியேற்றினர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு (AIADMK Head Office) வருவாய்த்துறை வட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இது தொடர்பாக ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் எடப்பாடி தரப்பினரிடம் சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்தை வருவாய்த்துறை இடமிருந்து பெற்ற சாவியைக் கொண்டு திறந்தனர். அப்போது பழனிசாமியுடன், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த நிலையில் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு வந்தப்போது, அதிமுக தொடர்பான வழக்குகள் எத்தனை உள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே உச்சநீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான மேலும் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீதிபதியை மாற்ற உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதித் துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது உத்தரவில் இதனைக் குறிப்பிட்ட கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் உங்கள் தரப்பு செயல்பாடு உள்ளது. தன்னை பற்றி தனிப்பட்ட கருத்துக்களை கூறியதால், வேறு நீதிபதிக்கு மாற்ற கோரியதாக ஓபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்தது. தீர்ப்பில் தவறு இருந்தால் மேல் முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என‌ நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி (Justice Krishnan Ramasamy) தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுத் தொடர்பாக வைரமுத்து என்பவர் தொடுத்த வழக்கு விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் வர உள்ளது. இதனையும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரிப்பார் என தெரிகிறது.