Pudukottai Severe Punishment: சாதிய தீண்டாமை கடைப்பிடித்தால் கடும் நடவடிக்கை: புதுக்கோட்டை ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை: மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கோயில் (Pudukottai Severe Punishment:) பூசாரி மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்று பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் சிலர் மலம் கலந்துள்ளனர். இந்த குடிநீரை அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்த சம்பவம் தெரியவந்ததை தொடர்ந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது பற்றி தகவல் கிடைத்த உடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி. வந்திதா பாண்டே உள்ளிட்டோர் வேங்கவயல் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அது மட்டுமின்றி அங்குள்ள அய்யனார் கோயிலில் எங்களை உள்ளே விடுவதில்லை எனற குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியரிடம் பட்டியல் இன மக்கள் கூறினர்.

இதனையடுத்து அப்பகுதி மக்களை கோயில் உள்ளே அழைத்து சென்று சாமி கும்பிட வைத்தார் ஆட்சியர். அதன் பின்னர் அங்குள்ளவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கையும் விடுத்தார்.