Producers demand increase in milk purchase price: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை

நாமக்கல்: Producers demand increase in milk purchase price: உற்பத்தி செலவுக்கு ஏற்ப ஆண்டுதோறும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலத்தில் பால் உற்பத்தி செலவு 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.42 வரை உயர்த்தியுள்ளனர். இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் பால் கொள்முதல் அளவு தற்போது குறைந்து வருகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஆகவே ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்த வேண்டியது கட்டாயமாகிறது. தமிழகத்தில் ஆவின் மூலம் தினசரி விற்பனையாகும் சுமார் 28 லட்சம் லிட்டர் பாலிற்கு, தமிழக அரசு ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் மானியம் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் 38 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்குவதில்லை. தற்போதைய நிலையில் ஒரு லி ட்டர் பால் உற்பத்தி செய்யரூ.44.79 செலவாகிறது. தற்போது ஆவின் 4.3 கொழுப்பு சத்துள்ள ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.32 மட்டுமே வழங்குகிறது.

ஆவினுக்கு பால் வழங்கும் சுமார் சுமார் 4.50 விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பால் உற்பத்தி செலவை கணக்கிட்டு, பால் கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும். தமிழக அரசு இதனை ஒரு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியில் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் 38.26 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தவிர தமிழக, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்திலிருந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் மீதமுள்ளவற்றை கொள்முதல் செய்து வருகின்றன. தமிழகத்தின் பால் தேவையில் 84 சதவீதமான1.25 கோடி லிட்டரை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்வது வருகிறது.

ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் தனியார் நிறுவனங்கள் பால் பாக்கெட்களின் விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தியது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.