Prize for 30 travelers in Chennai Metro train: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த 30 பேருக்கு பரிசு

சென்னை: Prize for 30 travelers in Chennai Metro train சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பேருக்கு விரைவில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கபடும்.

சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் ஜூலை 21-ம் தேதி முதல் இம்மாதம் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) தலைமையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

அதில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை (ரூ.2,500/- மற்றும் ரூ.50/- வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படவுள்ளது.

மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500/- மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது. மெட்ரோ பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500/-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450/- மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கும் மார்க் மெட்ரோ சார்பாக பரிசு பொருள் அல்லது பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள், பயணிகளை ஊக்குவிக்கவும், பயனளிக்கவும் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்கவும் அடுத்த மாதமும் தொடரும். அடுத்த மாதத்திற்கான குலுக்கல் (21.08.2022 – 20.09.2022) 2022 செப்டம்பர் மாதம் நடத்தப்படும்.

இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில் நிலையங்களில் இலவச முதலுதவி விழிப்புணர்வு:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மருத்துவப் பயிற்சிக்கான TACT அகாடமியுடன் இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக CPR (Cardiopulmonary resuscitation) போன்ற உயிர்காக்கும் முதலுதவி வழங்கும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மெட்ரோ இரயில் நிலையங்களில் நடத்துகிறது.

வரும் 27ம் தேதி திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும், 28ம் தேதி, அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலும் நடைபெறுகிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்குப்பெற விருப்பம் உள்ளவர்கள், 27ம் தேதி – https://tact-india.com/registration-forml/ , 28ம் தேதி – https://tact-india.com/registration-form2/ என்ற இணையதள முகவரில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த CPR விழிப்புணர்வின் ஒவ்வொரு அமர்விலும் 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் இலவச CPR அமர்வை முன்பதிவு செய்ய மேலே குறிப்பிட்டுள்ள இணைப்புகளில் பதிவு செய்யலாம்.

மெட்ரோ இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.