PMK founder Ramadoss : போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தில் ஏமாற்றம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: Disappointment over wage deal for transport workers : போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தொழிலாளர்களுக்கு மன நிறைவோ, மகிழ்ச்சியோ அளிக்காமல், ஏமாற்றத்தையே அளித்துள்ளது. குறைந்த பட்சம் 25 சதம் ஊதிய உயர்வு (At least 25 percent wage hike) கோரிய நிலையில், 5 சதம் மட்டுமே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை 2019 ஆம் ஆண்டு செப். 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜன. 1 ஆம் தேதி முதல் 7 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் விட ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த குறைகள் ஊதிய ஒப்பந்தத்தில் சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாகும். எனவே தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிவோடு பரிசீலனை (Government of Tamil Nadu will kindly consider this request) செய்து, அவர்களின் உரிமை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்டந்தோறும் தொழிலாளர் திறன் பயற்சி நிலையங்கள்

தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க மாவட்டந்தோறும் தனி நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் மூன்றாவது ஆட்சி மன்றக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார். மேலும் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூரில் பயிற்சி நிலைம் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்படும். தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க மாவட்டந்தோறும் தனி நிலையங்கள் ஏற்படுத்தப்படும் (Separate centers will be set up in every district to provide skill training to the workers) என்றார்.