Minister ma.Subramaniam : மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது : அமைச்சர் மா.சுப்ரமணியம்

சென்னை: Central Govt Free Booster Vaccination Ends on 30th September : மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதி வண்டிகள் ரூ. 341 கோடியில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) தொடக்கி வைத்தார். அதன்படி, சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பிலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. தேசிய அளவில் தில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நாள் தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே தமிழகத்தில் நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தற்போது தமிழகத்தில் நாள்தோறும் கரோனா தொற்றின் பாதிப்பு 500 என்ற அளவில் உள்ளது. எனினும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் வாரம் விட்டு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப். 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது (Central Govt Free Booster Vaccination Ends on 30th september). அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் வாரந்தோறும் தொடர்ச்சியாக சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டி உள்ளது. எனவே மக்கள் தாமதிக்காமல் வரும் முன் காக்கும் வகையில், கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது அவசியம். தமிழகத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் பொது மக்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக இதற்கான நேரத்தை ஒதுக்கி தடுப்புசி செலுத்திக் கொள்ள வேண்டும் (The general public should not be indifferent and immediately devote time to this and pay attention). தமிழக மக்களின் சுகாதாரத்தில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. எனவே இதன் பயனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.