Principal Accountant General Charge: தமிழக முதன்மை கணக்காய்வுத் தலைவராக நெடுஞ்செழியன் பொறுப்பேற்பு

சென்னை: Nedunchezhian took charge as the Principal Accountant General Of Tamil Nadu. தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவராக நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) ஆக திரு. சி. நெடுஞ்செழியன் இன்று பொறுப்பேற்றார். இவர்1996ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியிலமர்ந்தார்.

முதன்மை கணக்காய்வுத் தலைவர் பொறுப்பில், தமிழகத்தின் 37 துறைகளில், 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில CAGன் அமைப்பிற்கு அவப் தலைமை வகிக்கிறார். மாநில அரசின், நிதி, வருவாய், சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது துறை நிறுவனம் ஆகியவற்றைத் தணிக்கை செய்யும் பொறுப்பை அவர் அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த அலுவலகம், பல்வேறு தரப்பட்ட தலைப்புகளில் பல தணிக்கை அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தில் ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்கிறது.

நெடுஞ்செழியன் மத்திய அமைச்சகம் மற்றும் மாநிலத் துறைகளில் மீதான தணிக்கையில் மிகுந்த அனுபவம் உடையவர். அவர், ஐக்கிய நாட்டு சபையின் (UN) நிறுவனங்களான, UNAIDS, IARC மற்றும் UCன் நியூயார்க்கில் உள்ள தலைமையகத்திலும் தணிக்கை மேற்கொண்டுள்ளார். இவர் ஓமன் சுல்தானகத்தின் உச்ச தணிக்கை அமைப்பின் தணிக்கை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.

முதன்மை கணக்காய்வுத் தலைவராக பொறுப்பேற்றவுடன் நெடுஞ்செழியன் தனது அலுவலகத்தில் நடைபெற்று வரும் தணிக்கைகளை மதிப்பாய்வு செய்து, மாநில அரசின் பொறுப்புடைமையை சட்டமன்றத்தின் மூலம் உறுதி செய்யும் CAGன் கடமைகளை செவ்வனவே நிறைவேற்ற முழு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தணிக்கை அதிகாரிகளை ஊக்குவித்தார்.