Gold, Foreign currencies seized: ரூ. 29.40 லட்சம் மதிப்பிலான சிகரெட், தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

சென்னை: Rs. 29.40 lakh worth of cigarettes, gold, foreign currencies seized. ரூ. 29.40 லட்சம் மதிப்பிலான சிகரெட், தங்கம், வெளிநாட்டு கரன்சிகளை சென்னை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து நவம்பர் 29-ந் தேதி சென்னை வந்த 41 வயது பயணியை சென்னை சுங்கத்துறையினர் இடைமறித்து சோதனையிட்டனர். இந்த சோதனையில் 35 சிகரெட் பெட்டிகள், 450 கிராம் தங்கம் ஆகியவை மறைத்து எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.21,18,600 ஆகும். இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு நிகழ்வில் துபாய்க்கு செல்லவிருந்த 25 வயது பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் ரூ.8,22,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை உள்ளாடையில் மறைத்து அவர் எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம்.மேத்யூ ஜான்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.