Full blockade at Puttur, Bellare, Chulya : பிரவீன் நெட்டாறு கொலை: பள்ளிகளுக்கு விடுமுறை, புத்தூர், பெல்லாரே, சூள்யாவில் முழு அடைப்பு

இரவில் பிரவீன் நெட்டாரு கடையை மூடும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளன‌ர்.

மங்களூரு : Total blockade in Puttur, Bellare, Chulya : பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாருவின் கொலையைக் கண்டித்து புத்தூர், பெல்லாரே, சூளையா, கடபா ஆகிய நகரங்களில் இந்துத்துவா ஆதரவு அமைப்புகள் சுயமாக முன் வந்து முழு அடைப்பிற்கு ஆதரவு தர‌ அழைப்பு விடுத்தன. இதனையடுத்து புத்தூர், பெல்லாரே, சூள்யா பகுதிகளில் முழு அடைப்பு செய்யப்பட்டன. இதனையடுத்து அங்கிருந்த அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முழு அடைப்பையொட்டி வாகனங்களின் போக்குவரத்து அரிதாக இருந்தன‌.

புத்தூர் விவேகானந்தா, அம்பிகா கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன‌. பிரவீன் நெட்டாருவின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ( Minister Araka Gyanendra), பிரவீன் நெட்டாருவின் கொலைக்குப் பின்னால் மதவெறி சக்திகள் இருப்பதாகக் தெரிவித்தார்.

பிரவீன் நெட்டாரு கொலைக்கு பின்னணியில் மதவெறி சக்திகள் உள்ளன என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா. மேலும் செய்தியாளர்களிடம் கூறியது, அப்பாவி ஒருவரை மர்ம நபர்கள் தாக்கி உள்ளன‌ர். இரவில் பிரவீன் நெட்டாரு கடையை மூடும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளன‌ர். யார் மீது வெறுப்பு இருந்தாலும் இவ்வாறு கொலை செய்ய‌க் கூடாது. நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. பிரவீன் கொலையின் பின்னணியில் மதவெறியர்கள் (Religious fanatics) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே கொலைக் குற்றவாளிகளை காவல்துறையினர் அவர்களை நெருங்கி உள்ளனர். விரைவில் அவர்களை போலீசார் கைது செய்வார்கள்.

கேரள எல்லையில் உள்ள கிராமத்தில் (In a village on the border of Kerala) இந்த கொலை நடந்துள்ளது. குற்றவாளிகள் எங்களிடமிருந்து தப்ப முடியாது. கடந்த ஆண்டு கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்தன. ஆனால் அண்மைக் காலமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. தற்போது பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டது வருத்தமளிக்கிறது என்றார்.

கர்நாடக மாநிலம் தென் கன்னட மாவட்டம் சுள்யா வட்டம் பெல்லாரே பேட்டையில் கோழிக்கடை நடத்தி வந்த பாஜக இளைஞரணித் தலைவர் (BJP Youth Leader) பிரவீன் நெட்டாருவை செவ்வாய்க்கிழமை இரவு கடையை அடைக்கும் போது, அவரை மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இது தென் கன்னட மாவட்டம் மட்டுமின்றி கர்நாடக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுள்யா வட்டம் பெல்லாரே பேட்டையில் பேருந்து நிலையம் அருகே பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரேவின் உடலை இறுதி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இறுதிச் சடங்கில் பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் (BJP State President Nalin Kumar Katil), அமைச்சர்கள் அங்காரா, சுனில் குமார் மற்றும் பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதி தரிசனத்துக்கு வந்த பாஜக தலைவர்களை முற்றுகையிட்டு குரல் எழுப்பி, இந்து அமைப்பினர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.