Chennai second airport : சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியம்

சென்னை சர்வதேச விமான நிலையம் மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள சர்வதேச விமான நிலையமாக உள்ளது.

சென்னை : It is necessary to set up a second airport in Chennai : சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் பகுதியை, தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் (International Airport at Meenambakkam), உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என இரண்டு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நாளில் மட்டும் சுமார் 250 விமானங்கள் வந்து செல்கின்றன. ஆண்டுக்குச் சுமார் இரண்டு கோடி பேர் பயன்படுத்தும் இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள சர்வதேச விமான நிலையமாக உள்ளது. 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் (10 million passengers) இந்நிலைய விமானங்கள் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு சர்வதேச விமான நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த விமான நிலையம் தேசிய நெடுஞ்சாலை 45 ஐ (National Highway 45) ஒட்டியே அமைந்துள்ளது. இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நிலையத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்குவரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விமான நிலையத்தில் வாகனம் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்தால் நெரிசல் அதிகரித்துள்ளது.

எனவே இந்த விமான நிலையத்திற்கு அருகில் 2-வது விமான நிலையம் (2nd Airport) அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் சென்னைக்கு அருகிலேயே விமான நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக இந்திய விமான ஆணையம் திட்டமிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது காஞ்சிபுரம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

சென்னையில் அல்லது அதற்கு அருகில் ரூ. 40 ஆயிரம் கோடி (Rs. 40 thousand crores) செலவில், இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மதுராந்தகம்; காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே பரந்துார் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னுார் ஆகிய, 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், பன்னுார் மற்றும் பரந்துார் இறுதியாக பரிசீலிக்கப்பட்டன. பன்னுாரில், 4,500 ஏக்கர் நிலமும், பரந்துாரில் 4,791 ஏக்கர் (4,791 acres in Paranthar) நிலமும் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் ஒன்றை தேர்வு செய்வது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர் இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: இதில், காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram District), பரந்துார் பகுதியில், இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது என, இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரூ. 1,500 கோடி மதிப்பிலான, 5,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், இரண்டு விமான ஓடு பாதைகளுடன் (Two runways) கூடிய, பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இங்கு அதிக அளவிலான கட்டடங்கள் இல்லை. மேலும், சென்னை மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 12 கி.மீ, துாரத்தில் (12 km distance) உள்ளது. விமானங்கள் புறப்பட்டு செல்லவும், தரை இறங்கவும் வான் வெளியில் தடையில்லாத வகையில், இந்த பகுதி அமைந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர்கள் தெரிவித்தனர்.