Pongal gift token distribution from tomorrow: நாளை முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

சென்னை: Pongal gift token distribution from tomorrow. நாளை முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடுதோறும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2023 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 22ம் தேதி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையில் முதல்டவர் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடுதோறும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.