Women Jumping Into The Sea: குடும்பத் தகராறில் மெரினா கடலில் குதிக்க முயன்ற பெண்

சென்னை: சென்னை பட்டரவாக்கம் ஐய்யப்பன் (Women Jumping Into The Sea) தெருவைச் சேர்ந்தவர் ராதா 53, இவருடைய கணவர் சுப்பிரமணி. இரண்டு பேருக்கும் திருமணமாகி சுமார் 24 ஆண்டுகள் கடந்துள்ளது.

இந்நிலையில், ராதா நேற்று (டிசம்பர் 25) தனியார் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அவர் திடீரென்று கடல் உள்ளே நடந்து சென்றார். பின்னர் அலை வந்ததால் தத்தளித்து கொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக பணியில் இருந்த மெரினா உயிர் காக்கும் படை வீரர்கள் வெங்கட் பிரசாத் மற்றும் பிரேம்குமார் இருவரும் கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த ராதாவை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இது பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய முதல் கட்ட தகவலில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு அது தகராறாக மாறியிருக்கிறது. இதில் மனம் உடைந்து போன ராதா தற்கொலை செய்வதற்காக முடிவு செய்து மெரினா கடலில் குதித்துள்ளார் என தெரியவந்தது.

இதன் பின்னர் போலீசார் ராதாவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து அவர்களிடம் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் மெரினாவில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.