New Infections In India: இந்தியாவில் உயரும் கொரோனா வைரஸ்: 196 பேருக்கு புதிய தொற்று

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (New Infections In India) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,695 பேர் ஆக இருக்கிறது. இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,43,179 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் 2,20,05,46,067 டோஸஅ கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று (டிசம்பர் 25) மட்டும் 29,818 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Police seized Gutka: ரூ.5 லட்சம் மதிப்புடைய குட்கா மற்றும், காரை பறிமுதல் செய்த காரிமங்கலம் போலீசார்

முந்தைய செய்தியை பார்க்க:No more extra free ration: இனி கூடுதல் இலவச ரேஷன் இல்லையாம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு ‘செக்’