Plus 2 student commits suicide : பிளஸ் 2 மாணவி தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

plus-2-student-commits-suicide

சென்னை: Plus 2 student commits suicide in the hostel : சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் அருகே கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி (Girls High School) தங்கும் விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகம் திருத்தணி அருகே உள்ளா தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பூசனம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களின் 17 வயது மகள் சரளா. இவர் திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் புனித இருதய மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 (Studying Plus 2) கல்வி பயின்று வருகிறார். இப்பள்ளி தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். திங்கள்கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாராம்.

பின்னர் தோழிகள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தங்கும் விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை (suicide) செய்து கொண்டதையடுத்து, மாணவி கல்வி பயின்ற‌ பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன், துணை காவல் ஆய்வாள‌ர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி (Thiruvallur Government Medical College) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிளஸ் 2 மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் (Tiruvallur Tahsildar Senthilkumar) மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் நீட் தேர்வு எழுதுவதற்கு அஞ்சி அரியலூர் ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த நடராஜன்-உமா தம்பதியினரின் மகள் நிஷாந்தி, கள்ளக்குறிச்சி (kallakurichi) மாவ‌ட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்டனர். தற்போது பிளஸ் 2 மாணவி தங்குவிடுதில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.