Accident 8 killed, 20 injured : இரண்ட‌டுக்கு பேருந்து, மற்றோரு பேருந்து மீது மோதி விபத்து: 8 பேர் பலி, 20 படுகாயம்

உத்தரபிரதேசம் பூர்வாஞ்சல் விரைவுச்சாலை: லோனிக்த்ரா காவல் நிலையத்தின் நரேந்திரபுரா மத்ரஹா கிராமம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது, ​​இரண்ட‌டுக்கு பேருந்து மீது எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி உள்ளது.

நொய்டா: Double-decker bus collides with another bus: 8 killed, 20 injured :உத்தரபிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் விரைவு சாலையில், இரண்ட‌டுக்கு பேருந்துகள் மோதிக் கொண்ட‌ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேர் லக்னோவில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை காலை, லோனிக்த்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட (Loniktra police station limits) நரேந்திரபுரா மத்ரஹா கிராமம் அருகே பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது, ​​இரண்ட‌டுக்கு பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், 8 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன், படுகாயமடைந்தவர்கள் அவசர சிகிச்சை மையத்திலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 2 பேருந்துகளும் பீகாரில் இருந்து தில்லிக்கு சென்று கொண்டிருந்தன என‌ தெரிய வந்துள்ளது.

இது குறித்து பாராபங்கி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பாண்டே (Additional Superintendent of Police Manoj Pandey) கூறுகையில், பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் இருந்து வந்த பேருந்து நரேந்திரபுரா மதராஹா கிராமம் அருகே மற்றோரு பேருந்து மீது மோதியது. விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலத்த காயமடைந்தவர்கள் லக்னோவில் உள்ள அவசர சிகிச்சை மைய‌த்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தமும், இரங்கலையும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு இறைவன் ஸ்ரீராமன் அமைதியை வழங்கட்டும் என்றார்.

பூர்வாஞ்சல் விரைவுச் சாலை நடைபெற்ற பேருந்துகள் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த 3 பேர் அவசர சிகிச்சை மையத்திற்கும், காயமடைந்த‌வர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாரபங்கி காவல் கண்காணிப்பாளர் அனுராக் (Superintendent of Police Anurag) சமூக‌ ஊடகங்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.