THDC Recruitment 2022: தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Tehri Hydro Development Corporation India Limited (THDC): மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெடில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் & சிறப்புப் பட்டப்படிப்பு (முதுநிலைப் பிரிவு) ஆகிய வெவ்வேறு துறைகளில் நிலையான கால அடிப்படையில் பொறியாளர்களாக பணிபுரிய அனுபவமுள்ள மற்றும் ஆற்றல் மிக்கவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலிப்பணியிடங்கள் (Vaccancy):

பதவியின் பெயர்இடங்கள்
Engineers (Civil)33
Engineers (Electrical)38
Engineers (Mechanical)31
Engineers (Civil)-Fluid Mechanics01
Engineers (Electrical)- Power Electronics01
Engineers (Electrical)- Electrical Machines01
Engineers (Electrical)- Control & Instrumentation01
Engineers (Environmental)03
மொத்தம் இடங்கள்109

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம். அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

வயது: 01.08.2022 அன்று உயர் வயது வரம்பு 32 வயதாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு வகை வாரியாக பட்டியலிடப்படுவார்கள். தேர்வு செயல்முறை கல்வித் தகுதி, வேலை அனுபவம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டுள்ளது.

சம்பளம்: ரூ.60,000/-

பதிவுக்கட்டணம்: பொது/OBC(NCL)/EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் திருப்பிச் செலுத்தப்படாத பதிவுக் கட்டணமாக ரூ.600 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PwBDs/ExServicemen/Departmental பிரிவைச் சேர்ந்தவர்கள் (THDCIL பணியாளர்கள் மட்டும்) பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை தொடர்பான ஏதேனும் சந்தேகங்களுக்கு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 0315-2473837 மற்றும் 0315-2473412 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைக்கவும் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை)

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 19.08.2022 அன்று மாலை 5.30 மணி வரை கடைசி ஆகும். அதேபோல் பதிவுக் கட்டணம் செலுத்த 21.08.2022 அன்று மாலை 5.30 மணி வரை கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க மற்றும் விபரங்களை தெரிந்துகொள்ள: Click Here