Perarivalan case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை

Perarivalan case
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை

Perarivalan case: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்..

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய இந்த மனு மீது விசாரணை நடத்தியது, அப்போது, பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

மேலும், ஆளுநருக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜரானது தொடர்பாகவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த மனு மீதான விசாரணைக்குப் பிறகு, மத்திய அரசு சார்பில் கடந்த வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதல் செய்துள்ளது.

இதையும் படிங்க: Mookirattai keerai Soup: சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்