Online Gambling Rampant Victim: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை பறிக்கொடுத்தவர் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி (Online Gambling Rampant Victim) அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சிவன்ராஜ் 34. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் ரம்மியை பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளார். அதில் சிறு சிறு தொகையை சிவன்ராஜ் வென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெரிய தொகை வைத்து விளையாடியுள்ளார். அதில் அனைத்து தொகையையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தொலைத்த பணத்தை மீண்டும் ஆன்லைன் ரம்மியால் வென்று விட வேண்டும் என்று தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி சிவன்ராஜ் விளையாடி வந்துள்ளார். அதில் மீண்டும் அனைத்து பணத்தையும் இழுந்துள்ளார்.

மொத்தம் ரூ.15 லட்சத்தை ஆன்லைன் வாயிலாக விட்டுள்ளார். கடன் வாங்கிய பணத்தை எப்படி கொடுப்பது என்று தெரியாமல் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார் சிவன்ராஜ். பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த சிவன்ராஜை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மியால் உயிரை விடுவது தொடர்கதையாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அது போன்ற விளையாட்டை தடை செய்தால் இனி வரும் காலங்களில் உயிர் இழப்பை தடுக்கலாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.