Okanekal increases water flow : தமிழகம் ஒகனேக்கல்லுக்கு நீர் வரத்து 1.85 லட்சம் கன அடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையிலிருந்து 1.85 லட்சம் கன அடியாக நீர் வெளியேற்றம்

9 மாவட்டங்களில் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது.

தர்மபுரி : Okanekal increases water flow to 1.85 lakh cubic feet: காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகனேக்கல்லுக்கு நீர் வரத்து 1.85 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து 1.85 லட்சம் கன அடியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கர்நாடக, கேரள மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது (Karnataka and Kerala states continue to receive heavy rains). இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ். கபினி அணைகள் நிரம்பி வருகின்றனர். இதன் காரணமாக அங்கிருந்த அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து பிலிகுண்டலு வழியாக தமிழகம் ஒகனேக்கல்லுக்கு1.85 லட்சம் கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் காவிரி ஆற்றின் அருகே உள்ள அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல் மடுவு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. துணை ஆறான தொட்டெல்லா ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக‌ காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஒகனேக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப் பெருக்கு காரணமாக 50 வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் (Tourists) வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கே.ஆர்.எஸ், கபினி அணிகளிலிருந்து தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் (Union Ministry of Water Resources) வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் ஒகனேக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேருந்து நிலையம், சமுதாயக் கூடம், முதலைப் பண்ணை சாலை ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒகனேக்கல்லில் உள்ள சத்திரம், முதலைப் பண்ணை, ஆலம்பாடி, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வாக இருந்த வீடுகள், விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது.

மேட்டூர் அணை (Mettur Dam): காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை மாலை நொடிக்கு 1.85 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 45 வது நாளாக 120 அடியாக உள்ளது. அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.