Ganesha festival banned at Chamrajpet Eidgah ground : சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் பண்டிகை கொண்டாட தடை. ஹுப்பள்ளியில் ஈத்கா மைதானத்தில் அனுமதி

பெங்களூரு : Ganesha festival banned at Chamrajpet Eidgah ground in Bangalore, permit to Idgah Maidan at Hubballi : சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் பண்டிகை கொண்டாட தடை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் பண்டிகை கொண்டாட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை (Bangalore Chamrajpet) பகுதியில் உள்ள மைதானம் தங்களுக்கு சொந்தம் என்று நீண்ட நாள்களாக ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், அண்மையில் அது வருவாய்த்துறையினருக்கு சொந்த என்பதனை பெங்களூரு மாநகராட்சி உறுதி செய்தது. இதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அங்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் பண்டிகையைக் (Ganesha festival) கொண்டாட வேண்டும் என்று இந்து அமைப்புகள் அனுமதி கேட்டு வந்தன. இதற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அங்கு விநாயகர் பண்டிகையை கொண்டாட ஆக. 26 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம், அரசுக்கு அனுமதி அளித்தது.

இதனையடுத்து கர்நாடக வஃக்ப் வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு (Karnataka Waqf Board appeals to Supreme Court) செய்தது. இது தொடர்பான மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும், உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். மேலும் ஒரு ரிட் மனு அங்கு நிலுவையில் உள்ளது. எனவே அந்த இடத்தில் முன்பு இருந்த நிலையே தொடரும் என்றும், இதனை இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் விநாயகர் பண்டிகையை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு எந்த விதமான அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹுப்பள்ளி : கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் பண்டிகையை கொண்டாட (To celebrate Ganesha festival at Hupalli Eidgah Maidan) மாநகராட்சி அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இது தொடர்பான விசாரணையில், ஹுப்பள்ளி ஈத்கா மைதானம் வழிபாட்டு தலமக அறிவிக்கப்படவில்லை. எனவே அந்த மைதானத்தில் விநாயகர் பண்டிகை கொண்டாட தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து அங்கு விநாயகர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இருப்பினும் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர்.