Applications are invited from farmers for fish farming: மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க ரூ.4.20 லட்சம் மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: Applications are invited from farmers for fish farming under Pradhan Mantri Fisheries Development Scheme. பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பு செய்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY) 202122 மீன்வளர்ப்பு செய்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு (GC) 40% மானியமாக ரூ.2,80,000/- மற்றும் பெண்க ள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியமாக ரூ.4,20,000/- வழங்கப்பட உள்ளது. மேலும், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு (GC) 40% மானியமாக ரூ.2.80,000/- மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியமாக ரூ.4,20,000/வழங்கப்பட உள்ளது.

நன்னீர் மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவினத் தொகை ரூ.4,00,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு (GC) 40% மானியமாக ரூ.1,60,000/- மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியமாக ரூ.2,40,000/- வழங்கப்பட உள்ளது.

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7,50,000/-ல் பொதுப் பயனாளிகளுக்கு (GC) 40% மானியமாக ரூ.3,00,000/- மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC& ST) 60%மானியமாக ரூ.4,50,000/- வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட திட்டங்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்பு விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், மேட்டூர் அணை- 636401 என்ற முகவரியிலோ அல்லது 04298 244045 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.