Panneer Selvam : சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர் செல்வம்

o-panneer-selvam-took-over-the-aiadmk-head-office

சென்னை : O. Panneer Selvam took over the AIADMK head office : சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை அக்கட்சியினர் ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர் செல்வம் கைப்பற்றினார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களுக்கிடையே பிரச்னை எழுந்தது. இதனையடுத்து இருவரும் தலைமையில் அக்கட்சியினர் 2 அணிகளாக பிரிந்துள்ளனர்.

இரு அணிகளிடையே யாருக்கு பலம் அதிகம் என்பதனை நிரூப்பிக்கும் வகையில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, தனது பலத்தை நிரூப்பித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அடையலாம் என்று எடப்பாடி அணியினர் திட்டமிட்டு, பொதுக்குழுவிற்கான பணியை மேற்கொண்டு வந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் பிரசார வேனில் வந்த ஓ. பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கைப்பற்றினார்.

முன்னதாக அக்கட்சியின் இரு அணியினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். அதிமுக அலுவலகத்தில் இருந்த அக்கட்சியின் தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கும் மாலை அணிவித்து, அலுவகத்திற்குள் சென்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனது பணிகளை ஓ.பன்னீர் செல்வம் செய்யத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருத்தப்படுகிறது. இதனையடுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு வருகிறார். உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யவும் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.