AIADMK General Body Meeting : அதிமுக பொதுக் குழுவை நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பு

will-aiadmk-general-body-meeting-be-held-tomorrow

சென்னை : AIADMK General Body Meeting : அதிமுக பொதுக் குழுவை நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களுக்கிடையே பிரச்னை எழுந்தது. இதனையடுத்து இருவரும் தலைமையில் அக்கட்சியினர் 2 அணிகளாக பிரிந்துள்ளனர்.

இரு அணிகளிடையே யாருக்கு பலம் அதிகம் என்பதனை நிரூப்பிக்கும் வகையில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, தனது பலத்தை நிரூப்பித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அடையலாம் என்று எடப்பாடி அணியினர் திட்டமிட்டு, பொதுக்குழுவிற்கான பணியை மேற்கொண்டனர்.

அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது எனவும், எனவே அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பை திங்கள்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூடும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஞாயிற்றுகிழமை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களுக்கிடையே பிரச்னை எழுந்தது. இதனையடுத்து இருவரும் தலைமையில் அக்கட்சியினர் 2 அணிகளாக பிரிந்துள்ளனர்.

இரு அணிகளிடையே யாருக்கு பலம் அதிகம் என்பதனை நிரூப்பிக்கும் வகையில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, தனது பலத்தை நிரூப்பித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அடையலாம் என்று எடப்பாடி அணியினர் திட்டமிட்டு, பொதுக்குழுவிற்கான பணியை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது எனவும், எனவே அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு பிறகு தீர்ப்பை திங்கள்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி திங்கள்கிழமை காலை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பொதுக்குழுவை நடத்தலாம் என தெரிவித்தது. மேலும் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனையடுத்து வானாவரத்தில் அதிமுக பொதுக்குழு எடிப்பாடி பழனிசாமி அணியால் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருத்தப்படுகிறது.

பொதுக்குழுவில் பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்வது. மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்குவதற்கான தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டது.