Mallikarjun kharge : முதல்வர் போட்டியிலிருந்து விலக்க தேசிய‌ காங்கிரஸ் தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கேவை நியமிக்க முடிவு?

தில்லி: Mallikarjun kharge : முதல்வர் போட்டியிலிருந்து விலக்க தேசிய‌ காங்கிரஸ் தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கேவை நியமிக்க அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் ஆளும் பாஜகவிற்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அம்மாநில காங்கிரஸ் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் அக்கட்சியின் சார்பில் முதல்வராக பலரும் முயன்று வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தலைவர் டி.கே.சிவகுமார். பிரசாரக்குழுத் தலைவர் எம்.பி.பாட்டீல் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போட்டியை தடுக்க காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக்க கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தேசிய அரசியலில் ஈடுபட்டால், மாநில அரசியலில் ஆர்வம் காட்ட மாட்டார் என நம்பப்படுகிறது.

இதனால் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு ஆசை வைத்துள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமார், எம்.பி.பாட்டீல் ஆகியோருக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மறுத்து வருவதாலும், மாநில அரசியலில் தலையிடாமல் இருக்கவும் அக்கட்சியின் மேலிடம் மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பி.வி.நரசிம்மராவிற்கு பிறகு தென்னிந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலைவராவார்.