Minister Ma. Subramaniam: சென்னை 200 வார்டுகளிலும் நவ. 5 இல் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்ரமணியம்

சென்னை: November 5th all 200 wards of Chennai Special Medical Camp, Minister M. Subramaniam : சென்னை 200 வார்டுகளிலும் நவ. 5 இல் சிறப்பு மருத்துவ முகாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது (The Chennai Corporation has been experiencing continuous monsoon rains for the past few days). இதன் காரணமாக மழை தண்ணீர் தேங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வரின் தீவிரமான ஆய்வு மற்றும் வழிகாட்டுதலின்படி குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதிப்பு குறித்து அறிக்கைகள் பெறப்பட்டன. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 710 கோடி செலவில் 220 கி.மீ நீளத்திற்கு புதிய மழை வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டில் 700 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றிருந்தது (Last year, rain water was stagnant in 700 places). அது தற்போது 40 இடங்களாக குறைந்துள்ளன. அந்த 40 இடங்களில் 9 இடங்களில் மட்டுமே நீர் தேங்கி, அதனை மோட்டார்கள் வைத்து அதனை வெளியேற்றும் நிலை உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிதீவிர நடவடிக்கையால் மிகப்பெரிய பாதிப்பு குறைந்துள்ளது.

ஒரு சில இடங்களில் மட்டும் உள்ள மழை பாதிப்புகளை சரி செய்வதற்கு இரவு, பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றி வருகின்றன (Corporation employees are draining rainwater day and night to repair the rain damage). செங்கல்பட்டில் உள்ள 40 க்கும் அதிகமான ஏரிகள், குளங்களில் உபரியாக வருகின்ற நீர் செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒக்கியம் ஓடை வழியாக கடலில் கலக்கும் சூழல் இருந்தது. அது தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

பருவக்கால நோய்களான காய்ச்சல், சளி, இருமல், சேற்றுப்புண் (Seasonal diseases like fever, cold, cough, mud sore) உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் சென்னையின் 200 வார்டுகளிலும் நவ. 5‍ ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளன என்றார்.