Chief Minister M.K.Stalin : ராஜராஜசோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: Rajarajacholan’s birthday will be celebrated as a state festival: Chief Minister M.K.Stalin : ராஜராஜசோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது (Rajarajacholan’s birthday is celebrated annually by various organizations in Thanjavur district as Sadaya festival). பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவிக்க பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும், ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் (In the years to come, Rajaraja Cholan’s birthday will be celebrated as a state festival). மேலும் தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழனின் மணிமண்டபம் மேம்படுத்தி, பொலிவூட்டப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச‌ப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய பெருமை ராஜராஜசோழனை சேரும். அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா (This year is the 1037th Sadaya festival of Rajaraja Chola) தஞ்சை பெரிய கோவிலில் புதன்கிழமை தொடங்கியது.

இதில் கலந்து கொண்ட அந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் (District Collector Dinesh Ponraj), மக்கள் நலனை முதன்மையாக வைத்து செயல்பட்டால், அவர் காலகாலத்தால் மறக்கப்பட மாட்டார் என்பதற்கு ராஜராஜ சோழனே சாட்சி. காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் ராஜராஜ சோழன் அதற்கு சான்றாக விளங்குவது, தஞ்சை பெருவுடையார் திருக் கோயில் என்றார்.