New vehicles to municipal heads, commissioners: நகராட்சி தலைவர்கள், ஆணையர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்

சென்னை: New vehicles to municipal heads, commissioners: நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகளை ஆய்வு மற்றும் தொடங்கி வைப்பது என சில நாட்களாக தமிழக முதல்வர் பிஸியாக இருந்தார். தற்போது போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று தலைமை செயலகம் சென்ற முதல்வர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வரிடமிருந்து அனைவரும் சாவியை பெற்றுக்கொண்டனர்.

Also Read: நாடாளுமன்றத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் தற்போது முதற்கட்டமாக 100 நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 91 ஸ்கார்பியோ வாகனங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், நகராட்சிகில் உள்ள ஆணையர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் ஆகியோரின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 96 பொலிரோ புதிய வாகனங்களும் என மொத்தம் 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினா இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், அப்புதிய வாகனங்களுக்கான சாவிகளை நகரமன்றத் தலைவர்களிடம் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பா. பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ரூ. 29.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கம் மற்றும் மேலாண்மை திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, இரா.தாஸ், கு.தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.

Also Rad: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

Also Read: சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலையில் மட்டும் 53 லட்சம் பேர் பயணிப்பு