Modi will be bjps pm candidate : 2024 தேர்தலிலும் மோடிதான் பிரதமர் வேட்பாளர் : மத்திய அமைச்சர் அமித் ஷா

Narendra modi: 2024 தேர்தலிலும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும் இதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.

பாட்னா: Modi will be bjps pm candidate : பாஜகவில் முதியவர்களுக்கு இடமில்லை என்ற கருத்து ஏற்கனவே நடந்த பல நிகழ்வுகளில் நன்கு அறியப்பட்டதாகும். எனவே அடுத்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் வேட்பாளராக வருவாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து உலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு முன்னணி தலைவர்கள் கொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது: 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக-ஜேடியு கூட்டணி தொடரும். அடுத்த மக்களவைத் தேர்தலிலும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

செயற்குழு கூட்டத்தில் காஷ்மீர் பெண்களால் தயாரிக்கப்பட்ட மூவர்ணக் கொடி விநியோகிக்கப்பட்டது. சிறப்பு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களைக் கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. அதே கூட்டத்தில் பீகாரில் உள்ள ஜேடியுவுடன் பாஜக கூட்டணி (BJP alliance with JDU)வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டணி 2024 மக்களைத் தேர்தலிலும் எந்த குழப்பமும் இல்லாமல் தொடரும் என அமித்ஷா தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடியின் அரசியல் ஓய்வு குறித்த அனைத்து குழப்பங்களுக்கும் திரையை உயர்த்திய அமித் ஷா, 2024 தேர்தலிலும் நரேந்திர மோடியே பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் (Modi will be bjps pm candidate : )என்று கூறினார். இதில் எந்த குழப்பமும் இல்லை என்றார். மேலும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பற்றி பேசிய அமித் ஷா, இந்த முறை நாட்டில் உள்ள அனைத்து வீட்டிலும் உள்ளவர்களையும் சுதந்திர தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளோம். தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நாட்டின் தேசியக் கொடியை பறக்கவிடுவதே எங்கள் நோக்கம் என்றார்.

பிரதமராக‌ நரேந்திர மோடி பதவி ஏற்றது.

2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாஜக‌ கட்சி தலைமையிலான‌ தேசிய ஜன‌நாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி (Narendra Modi as Prime Ministerial candidate) அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அவர் போட்டி இட்டார். வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி முதன் முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு 3 வது முறையாக நரேந்திர மோடி போட்டியிடுவதற்கு பாஜகவின் சட்டவிதிகள் அனுமதிக்குமா? (Will the rules of BJP allow it?) என்று கேள்வி எழுப்பப் பட்டு வந்த நிலையில், அமித்ஷாவின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்காக பாஜகவின் சட்டவிதிகள் திருத்தப்படும் என்று தெரிகிறது. அக்கட்சியில் 2 முறைக்கு மேல் எந்த பதவியிலும் யாரும் தொடரக்கூடாது என சட்டவிதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.