N.T. Rama Rao daughter Uma Maheshwari suicide : முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள் உமா மகேஸ்வரி தற்கொலை

ஹைதராபாத் : Former Chief Minister N.T. Rama Rao daughter Uma Maheshwari suicide :தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் நான்காவது மகள் கே.உமா மகேஸ்வரி திங்கள்கிழமை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தூக்கில் உயிரிழந்த நிலையில் உள்ள அவரது உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்துள்ளனர்.

ஹைதராபாத் : Former Chief Minister N.T. Rama Rao daughter Uma Maheshwari suicide :தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் நான்காவது மகள் கே.உமா மகேஸ்வரி திங்கள்கிழமை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தூக்கில் உயிரிழந்த நிலையில் உள்ள அவரது உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உமா மகேஸ்வரி (Uma Maheshwari ) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை, அவர் தனது படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து வழக்கு பதிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார். உடல்நலக்குறைவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த போலீஸார். பிரேத பரிசோதனைக்கு பிறகே உமா மகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

உமா மகேஸ்வரி இறந்த தகவலையடுத்து, நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜூப்ளி உள்ள உமா மகேஸ்வரி இல்லத்திற்கு வந்தனர். தெலுங்கு தேசக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu is the leader of the Telugu Desam Party), புவனேஸ்வரி, லோகேஷ், பிராமணி ஆகியோரும் உமா மகேஸ்வரியின் இல்லத்திற்கு வந்தனர். இதற்கு முன்பே நந்தமுரி கல்யாண்ராம் அங்கு வந்திருந்தார். உமா மகேஸ்வரிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் தீட்சிதாவிற்கு அண்மையில் திருமணம் நடந்தது. மூத்த மகள் விசாலா அமெரிக்காவில் உள்ளார். தகவலையடுத்து அவரும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள‌ இந்தியாவிற்கு வருகிறார்.

உஸ்மானியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பிறகு உமா மகேஸ்வரியின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. உமா மகேஸ்வரியின் விருப்பத்திற்கிணங்க அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன (His eyes were donated). மூத்த மகள் விசாலா அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அதற்காக அவரது உடல் எம்பாமிங் செய்யப்படுகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

உமா மகேஸ்வரியின் உடல் அவரது குடும்ப முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறது. ஆந்திரா மாநிலம் மட்டுமின்றி தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் என்.டி.ராமராவ், அவரது மகன் பாலகிருஷ்ணா, பேரன் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் புகழ்பெற்றுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.