Police S.I., Physical Test: போலீஸ் எஸ்.ஐ., உடற்தகுதி தேர்வு: வரும் 5ம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள்

சேலம்: Police S.I., Physical test Free training classes on coming 5th: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளருக்கான உடற்தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளருக்கான உடற்தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (tnusrb) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் (Sub Inspector) பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. உடற்தகுதி தேர்விற்கு பயிற்சி பெறும் பொருட்டு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் 05.082022 அன்று காலை 7.00 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

மேலும், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் 0.490055041 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ஈப்பு வாகனம் ஏலம் (Govt Vehicle Auction sale):

ஆத்தூர் கல்வி மாவட்ட பள்ளிக் கல்விதுறையில் உள்ள ஈப்பு வாகனம் 17.082022அன்று சேலம், சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளதாவது: வாகனம் ஏலம் எடுக்க விரும்புவோர் ஆகஸ்ட்-7 ஆம் தேதி காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் நுழைவு கட்டணம் ரூ.50/- மற்றும் TNV 8335 என்ற நான்கு சக்கர ஈப்பு வாகனத்துக்கான முன்வைப்புத் தொகை ரூ.2,500/- செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம்.

அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடத்தப்படும். ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படும். இந்த ஏலத்தை ரத்து செய்வதற்கோ ஏலத்தை நிறுத்தி வைக்கவோ, ஏலத்தை முடித்து வைப்பதற்கோ ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு முழு அதிகாரம் உண்டு.

ஏலம் எடுப்பவர் அரசு நிர்ணயித்துள்ள அடிப்படையில் GST தொகையினை ஏலம் எடுப்பவர்களே செலுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.