Monkey pox one died : இந்தியாவில் குரங்கு அம்மைக்கு முதல் பலி

கேரளா: First victim of monkey pox in India : இந்தியாவில் குரங்கு அம்மைக்கு முதல் பலி கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய நபர், சனிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளது. இதனை புணேவில் உள்ள தேசிய வைராலஜி மையம் உறுதி செய்துள்ளது. இதுதான் இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ள முதல் (Monkey pox one died)பலியாகும்.

இது குறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது: கடந்த ஜூலை 22-ஆம் தேதி வளைகுடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த‌ 22 வயது நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு குரங்கு அம்மை (Monkey pox)பாதிப்பு உள்ளது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை ஜூலை 27-ஆம் தேதி மருத்துவமனையில் தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கேரளாவில் 3 பேர், தெலுங்கானாவில் ஒருவர், தில்லியில் ஒருவர் என 5 பேர் குரங்கு அம்மையால் (5 people are affected by monkey pox) பாதிக்கப்பட்டிருந்து உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தைச் சேர்ந்த மற்றொருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர் 21 நாட்களுக்கு (21 days) தனிமைப் படுத்தப்பட வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் (Wearing face mask is mandatory), கைகளின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனுடன், உடலின் அனைத்து காயங்களையும் துணியால் மூட வேண்டும் என்றும், காயம் முழுமையாக குணமாகும் வரை யாரிடமும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசு தனது வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது. ஏற்கனவே கேரளாவில் 3 குரங்கு காய்ச்சலும், தில்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் பாதிக்கப்பட்ட நபரின் தொடர்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்புள்ளவர்கள் யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மைக்கான தடுப்பூசி தயாரிப்பதற்கான உலகளாவிய ஏலத்திற்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன் விட்ரோ கண்டறிதல் (IVD) கிட் தயாரிப்பதற்கும், தொற்று கண்டறியும் சாதனங்களைத் தயாரிப்பதற்கான‌ ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

உடலுறவின் மூலமும் குரங்கு அம்மை பரவுகிறது

குரங்கு அம்மை தொற்று நெருங்கிய உடல் தொடர்பு மூலமாகவும் பரவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் குரங்கு அம்மையின் பரவலைக் கருத்தில் கொண்டு, இது பாலியல் ரீதியாக பரவும் நோயாகத் தோன்றுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, முத்தமிடுதல், தொடுதல் (Kissing, touching), வாய்வழி உறவு அல்லது உடலுறவு உள்ளிட்ட அனைத்து வகையான நெருங்கிய தொடர்புகள் மூலமாகவும் குரங்குப் அம்மை பரவலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, தோலில் ஏதேனும் புதிய வகை சொறி தோன்றும்போது உடலுறவைத் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், இந்த நோய் சிக்கன் பாக்ஸ், ஹெர்பெஸ் மற்றும் சிபிலிஸ் போன்ற பிற தொற்று நோய்களைப் போன்றது (Like other infectious diseases) என்று கூறுகிறார்கள்.

குரங்கு அம்மையின் அறிகுறிகள்

இதன் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி மற்றும் பொது சோம்பல் ஆகியவை அடங்கும். காய்ச்சல் குறைந்த பிறகு, உடல் முழுவதும் ஒரு விதமான‌ சொறி, தடிப்புகள் (Rashes) தோன்றும். இந்த தடிப்புகள் பொதுவாக முகத்தில் தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன, பொதுவாக உள்ளங்கைகள் மற்றும் கால்களின் உள்ளங்கால்களில் தோன்றும். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும் நபருக்கும் குரங்கு அம்மை பரவும்.

வைரஸ் எப்படி பரவுகிறது?

வைரஸ் தோல், சுவாச பாதை அல்லது கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாக (through the eyes, nose or mouth) உடலில் நுழையலாம். குரங்குகள், எலிகள் மற்றும் அணில் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளின் தொடர்பு மூலமும் இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் படுக்கை மற்றும் உடைகளை சுத்தம் செய்யாவிட்டாலும் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.