Sanjay Arora IPS : தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா தில்லி காவல் ஆணையராக பதவி ஏற்பு

தில்லி: Sanjay Arora IPS took charge as Delhi Police Commissioner: தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா தில்லி காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார்.

தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரோ திபேத் எல்லை காவல் படையின் இயக்குநர் ஜெனரலாக பதவி வகித்து வந்த சஞ்சய் அரோரா இன்று தில்லி காவல் ஆணையராக (Delhi Police Commissioner) பதவி ஏற்றார்.தில்லி காவல் ஆணையராக பதவி வகித்து வந்த ராகேஷ் அஸ்தனாவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து அந்த பதவிக்கு சஞ்சய் அரோரா பொறுப்பேற்றார். இதற்கான உத்தரவை நேற்று உள்துறை பிற‌ப்பித்தது. மறு உத்தரவு வரும் வரை இந்தப் பொறுப்பில் சஞ்சய் அரோரா வகிப்பார் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சஞ்சய் அரோரா ஏற்கெனவே பொறுப்பேற்றிருந்த திபேத் எல்லை காவல் படை இயக்குநர் ஜெனரலாக பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இந்திய நேபாள எல்லை பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் எஸ்.எஸ். தாஸன் திபேத் எல்லை காவல் படை இயக்குநர் ஜெனரலாக கூடுதல் (Additional Director General) பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, பொறியியல் இளங்கலை பட்டம் படித்தவர். ஐபிஎஸ் பணியில் சேர்ந்த பிறகு தமிழக காவல் துறையில் மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.

பின்னர் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிக்குழுவிற்கு பொறுப்பேற்றிருந்த இவருக்கு வீரச்செயலுக்கான முதல்வரின் வீரப்பதக்கம் வழங்கப்பட்டது. இவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (Former Chief Minister Jayalalithaa) பாதுகாப்பிற்கு உருவாக்கப்பட்ட குழு அமைப்பதற்கு முக்கிய பங்காற்றினார். இதற்காக இவர் தேசியப் பாதுகாப்பு குழுவில் பயிற்சி பெற்றார். 1997 முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஐடிபிபி கமண்டராக பதவி வகித்தார். அப்போது உத்தரகண்ட் மாநிலத்தின் மாட்லியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினர் கமாண்டாடென்டாக பணியாற்றினார். பின்னர் முசோரியில் ஐடிப்பி அகாதெமியில் பயிற்சி அளிப்பவராக பணிபுரிந்தார்.

மீண்டும் தமிழக மாநில காவல் (Tamil Nadu State Police) பணிக்கு திரும்பிய அரோரா 2002 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாநகர காவல் ஆணையராகவும், பின்னர் விழுப்புரம் சரக டிஐஜியாகவும், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை இயக்குநராகவும் பணியாற்றினார். சென்னை நகர காவல் துறையில் போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும், பின்னர் பதவி உயர்வு பெற்று தமிழக காவல் துறையில்ல் ஏடிஜிபி (நிர்வாகம்) ஆக நியமிக்கப்பட்டார். சிறிது காலம் சிஆர்பிஎஃப், எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் சத்தீஸ்கர், ஜம்மு, காஸ்மீர் பகுதிகளிலும் சஞ்சய் அரோரா பணியாற்றினார். சிறந்த சேவைக்கான காவல் பதக்கம், குடியரசு தலைவரின் காவல் பதக்கம், ஐக்கிய நாடுகளின் சபையின் அமைதி காக்கும் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை சஞ்சய் அரோரா பெற்றுள்ளார். 1988 ஆம் அண்டு கேடர் அதிகாரியாக தமிழக காவல் துறையில் பணியாற்றிய சஞ்சய் அரோரா, தற்போது தில்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.