Neginahal Basavalinga Swamy : நெகினாஹல பசவசித்தலிங்க சுவாமிகள் தூக்கிட்டு தற்கொலை

Neginahal Basavalinga Swamy: பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது பெயர் பரப்பப்பட்டதால் மனமுடைந்த நெகினாஹல சுவாமிஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெல்காம்: Neginahal Basavalinga Swamy hanged himself : பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் காவலில் உள்ள முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சுவாமிகளின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இன்று போலீசார் முருகா மடத்தின் மடாதிபதி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இத்தனை சட்ட நடவடிக்கைகளுக்கு மத்தியில், முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சுவாமிகள் (The abbot of Muruga Mutt is Sivamurthy Swamy)எதிர்கொள்ளும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சுவாமிகள் மீதான போக்ஸோ வழக்கு வெளிச்சத்துக்கு வந்த நிலையில், பாலியல் தொல்லைக்கு எதிராக இரண்டு பெண்கள் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வைரலான ஆடியோவில் நெகினாஹல சுவாமிஜியின் பெயரை இரண்டு பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது பெயர் பரவியதன் பின்னணியில், நெகினாலா சுவாமிஜி ( Neginahal Swamy) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து இரண்டு பெண்கள் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது (It is going viral on social media). சுயமரியாதையை விலையாகக் கொடுக்க விரும்பாத‌ நெகினாஹல பசவசித்தலிங்க சுவாமிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக மடத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

வைரலாகும் இந்த ஆடியோ குறித்து உரிய விசாரணை நடத்த கோரி பைலஹொங்கலா டிஎஸ்பியிடம் (Bylahongala Dsp) மடத்தின் நிர்வாக குழு புகார் அளித்துள்ளது. சில கந்து வட்டிக்காரர்கள் லிங்காயத் சுவாமிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.எங்கள் சுவாமிகளை காது கூசும் வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ஆணாதிக்கம் என்று கூறி மத உணர்வுகளை புண்படுத்தி லிங்காயத் சமுதாயத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆகஸ்ட் 26 அன்று, மைசூரில் உள்ள நசர்பாத் காவல் நிலையத்தில்(Nazarbad Police Station) முருகா மடாதிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு மைனர் பெண்கள் (சித்ரதுர்கா) மைசூரு ஒடநாடி அமைப்பின் உறுப்பினர்கள் முன்பு முருக மடத்தின் மடாதிபதி தங்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர். சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒடநாடி அமைப்பினர் ஆதரவுடன் மைனர் சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிவமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மடத்தின் செயலாளர் பரமசிவய்யா, வழக்கறிஞர் கங்காதரையா ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். முருகா மடத்தில் தங்கியிருந்த சிவமூர்த்தி சுவாமிகள் கைது (Arrested செய்யப்பட்டார். அவரது ஜாமீன் நீராகரிகப்பட்டத்தையடுத்து, சுவாமிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இதனையடுத்து, சித்ரதுர்கா மாவட்ட சிறைக்கு சிவமூர்த்தி சுவாமிகள் அனுப்பி வைக்கப்பட்டார். மறுபுறம், வழக்கின் 2 வது குற்றவாளியான‌ பெண் வார்டன் காவல்துறையின் காவலில் உள்ளார், தற்போது மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சுவாமிகள் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.