Fatima Shaikh : ஆசிரியர் தினத்தில் அறியப்பட வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய ஆளுமை பாத்திமா ஷேக்

Fatima Shaikh : சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே நடத்திய பள்ளியில் தலித் குழந்தைகளுக்கு கற்பித்த இந்தியாவின் முதல் முஸ்லீம் ஆசிரியர்களில் பாத்திமா ஷேக் ஒருவர். இருப்பினும், அநீதிக்கு எதிராகப் போராடிய பல பெண்களைப் போலவே, இந்தக் கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியின் நினைவு இந்திய உணர்விலிருந்து இன்றுவரை துடைத்தெறியப்பட்டுள்ளது.

சாவித்ரிபாய் மற்றும் ஜோதிபா பூலே (Savitribai and Jyothiba Phule) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், வரலாற்றின் பக்கங்களில் அவர் தொலைந்து போனவர். ஆனால் இன்று உலக அளவில், டூடுல் மூலம் பெண்ணிய, கல்வியாளர் ஃபாத்திமா ஷேக்கை கூகுள் கெளரவிக்கிறது.

பாத்திமா ஷேக், 1848 இல் சுதேசி நூலகத்தை சாவித்திரிபாய் புலேவுடன் இணைந்து நிறுவினார். இது பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளி. அவர் தனது சகோதரர் உஸ்மான் ஷேக்குடன் வசித்து வந்தார். அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் பள்ளிக்கூடம் அமைத்து கல்வி போதித்ததிற்காக ஜோதிபாய் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே இருவரையும் ஜோதிராவின் தந்தை கோவிந்தராவ், மகனையும், மருமகளையும் கல்வி சொல்லித்தருவதை நிறுத்தச் சொன்னார். இல்லை என்றால் சனாதன வாதிகள் அவர்கள் குடும்பத்தையை சமூக விலக்கலுக்கு உட்படுத்துவோம் என மிரட்டினார்கள்.

எனவே, கோவிந்த் ராவ் மகனையும், மருமகளையும் கல்வி சொல்லிக்கொடுப்பதை நிறுத்தச் சொன்னார்கள். இல்லை எனில் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற வற்புத்தினர். சாவித்திரி பாய் தொடர்ந்து பள்ளிக்குப் போய் வந்ததால் (Savitri Bai continued to go to school), அவர்களது பெற்றோர், மேல் ஜாதி வர்க்கத்தினரின் மிரட்டுதலால் புலே தம்பதியரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர். தம்பதியினர் வெளியேற்றப்பட்ட பின்னர் , அவர்களுக்குப் போக புகலிடம் இல்லை. ஆனாலும் இருவரும் மனம் தளரவில்லை.

புலே தம்பதியினர், 1841-1847க்கு இடையில் மாலி சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பின்னர், அப்போது அதனை அறிந்த உஸ்மான் ஷேக் மற்றும் பாத்திமா ஷேக் (Usman Shaikh and Fatima Shaikh) இருவரும், கஞ்ச் பேத்தில் உள்ள மோமின்புராவில் உள்ள வீட்டில் அவர்களுக்கு இடம் கொடுத்தனர். ஃபுலே தம்பதியினருக்கு உஸ்மான் ஷேக் மற்றும் பாத்திமா ஷேக் இருவரும் பாதுகாப்பும் கொடுத்தனர்

பாத்திமா ஷேக் முன்பே கல்வி கற்றவர்தான். சாவித்திரிபாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் இருவரும் ஆசிரியர் பயிற்சியும் பெற்றனர். எனவே 1848ல், ஜோதிபாய் புலே, உஸ்மான் ஷேக் இன்னும் வேறு சில நல்ல உள்ளங்களின் உதவியுடன், ஷேக்குகளின் இல்லத்தில், அந்த கூரையின் கீழ் சுதேசி நூலகம் திறக்கப்பட்டது (Swadeshi Library opened). அந்த இடத்தில்தான் சாவித்திரிபாய் புலே மற்றும் ஜோதிபாய் புலே இருவரும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பள்ளியை மீண்டும் துவக்கினர்.

இந்த பள்ளியில் மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளி இதுதான். இந்த பள்ளியில் சாவித்திரிபாய் புலே முதல் பெண் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். பாத்திமா ஷேக் முதல் பெண் முகமதிய ஆசிரியராக பணி புரியத்துவங்குகிறார். இந்தியாவில் முறையாகப் பயிற்சி பெற்று பணிபுரிந்த பெண் ஆசிரியர்கள் சாவித்திரிபாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் இருவரும்தான் (Savitribai Phule and Fatima Shaikh are the two women teachers who have been formally trained and worked in India).