Chief Minister M. K. Stalin will go to Kerala tomorrow : தென் மாநில முதல்வர்கள் கூட்டம்: நாளை கேரளாவிற்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: Meeting of Southern State Chief Ministers, Chief Minister M. K. Stalin will go to Kerala tomorrow : தென் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக‌ நாளை கேரள மாநிலத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கும் (Aspects related to inter-state river water sharing will be discussed) வகையில் மண்டல அளவிலான கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மத்திய அமைச்சகத்தால் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் செப். 3-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவனந்தபுரத்திற்கு செல்கிறார்.

இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் (Tamil Nadu, Puducherry, Kerala, Andhra Pradesh, Telangana, Karnataka) ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு மத்திய உள்துறை அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார். திருவனந்தபுரத்தில் அம்மாநில முதல்வர் பிரனாய் விஜயனை சந்தித்து, முல்லை பெரியாறு உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

இதனைத் தொடர்ந்து 3 ஆம் தேதி நடைபெறும் தென் மண்டல‌ கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் (Attends South Zone Council meeting). இதனிடையே இன்று திருப்பூரில் பொங்கலூர் பழனிசாமியில் இல்லத் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கிருந்து சென்னை திரும்பும் , அவர் நாளை திருவனந்தபுரத்திற்கு செல்கிறார். செப். 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெறும் புதுமைப் பெண் திட்டம், மாதிரி பள்ளி, தகைசால் பள்ளிகள் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் தில்லியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் பங்கேற்க உள்ளார்.