Students tied teachers to trees and beat : குறைந்த மதிப்பெண்கள் வழங்கிய‌தற்காக ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த‌ மாணவர்கள்

ராஞ்சி: Students tied teachers to trees and beat them for giving low marks : கடந்த சில நாட்களாக குற்றச் செய்திகளால் பரபரப்பாக பேசப்படும் ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் (Jharkhand state Dumka district) நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது எங்கும் வைரலாகி வருகிறது. தும்கா மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறை தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், நடைமுறைத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதற்காக‌ மாணவர்கள் ஒரு குழுவினர் கோபமடைந்துள்ளனர். ஆசிரியர் குறைந்த மதிப்பெண்கள் கொடுத்ததால் 10 மாணவர்கள் தோல்வியடைந்ததாகவும், இதனால் அவர் வருத்தமும், ஆத்திரமும் அடைந்ததாக அங்கும் பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

பள்ளி ஆசிரியர் குமார் சுமன், பள்ளி எழுத்தர் சோனே ராமிடம் (Teacher Kumar Suman, School Clerk Sone Rami), சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் நடைமுறைத் தேர்வு மதிப்பெண்கள் வழங்காமல் எங்கள் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள் என்று கூறினார். பின்னர் நடைமுறைத் தேர்வில் ஆசிரியர்கள் வழங்கிய‌ மதிப்பெண்களைக் காட்டுமாறு எழுத்தரிடம் கேட்டார். நடைமுறை தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை எழுத்தர் மற்றும் ஆசிரியர்கள் காட்டாததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் 3 பேரை பள்ளி வளாகத்தில் மரத்தில் கட்டி வைத்து. தடியால் அடித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர் குமார் சுமன், நடைமுறை மதிப்பெண்கள் வழங்க எனக்கு அதிகாரம் இல்லை. சில மாணவர்களின் நடைமுறை தேர்வு மதிப்பெண்கள் தேர்வு முடிவுகளில் சேர்க்கப்படவில்லை. இதில் என் மீது எந்த தவறும் இல்லை. தற்போது உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர் (Education officials are investigating the matter). மதிப்பெண் வழங்காததால் ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் அடிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மகேஷ்வர் என்ற காலம் மலை ஏறி உள்ளதை காண்பிக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் ஆசிரியர்கள் அச்சமும், சோகமும் அடைந்துள்ளனர்.