Hansika stunning look: பிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மயக்கிய ஹன்சிகா

சென்னை : Hansika looked stunning at the Filmfare Awards. நடிகை ஹன்சிகா பிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மெரூன் நிற கவுனில் வந்து அனைவரையும் அசத்தியுள்ளார்.

சின்ன குஷ்பூ என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா, தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இவர் நடிக்க வந்தபோது கொழுக் மொழுக் என்று தமிழக ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்கத்தான் இருந்தார். ஆனால் தற்போது தன்னுடைய உடலை குறைத்து மாறுபட்ட லுக்கில் காணப்படுகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் நடித்துவந்த ஹன்சிகா. முன்னணி நடிகர்களான விஜய், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அரண்மனை படத்தின் இரு பாகங்களில் பேயாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனைததொடரர்ந்து சிம்புவுடன் காதல் என சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த சர்ச்சைகளில் இருந்து வெளியான ஹன்சிகா, சமீபத்தில் அவருடனேயே இணைந்து நடித்தார்.

சிம்புவுடன் இவர் நடிப்பில் சமீபத்தில் மஹா படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ஹன்சிகாவின் நடிப்பு சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்றது. அடுத்ததாக ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் ஈஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஹன்சிகா சிறப்பான மெரூன் நிற கவுனில் வந்து அனைவரையும் அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.