Madurai Jasmine is selling for Rs.3,000: அதிரடியாக உயர்ந்த மதுரை மல்லிகைப்பூ; கிலோ ரூ.3,000க்கு விற்பனை

மதுரை: Madurai Jasmine is selling for Rs.3,000 per kg. மதுரையில் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள பூக்களும், அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கு மல்லிகைப்பூ நாளொன்றுக்கு சராசரியாக 50 டன் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை உள்ளது. மதுரை விமான நிலையம் மூலமாக நாள் தோறும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது . இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, 1500 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்தது. இதனால், ஒரு வாரமாக விலை உயர்வு நீடித்து வருகிறது .

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த நாள் என்பதால், மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய், 50 ரூபாய்க்கு விற்பனையாகும். சம்மங்கி இன்று 250 ரூபாய்,300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி,முல்லை 1500 ரூபாய்க்கும்.50 ரூபாய்க்கு விற்கும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால் ,வியாபாரம் மந்தமாக காணப்படுகிறது என தெரிவித்தனர்.