Madurai Collector warns coastal residents: வைகை அணையிலிருந்து கூடுதல் நீர்: கரையோர மக்களுக்கு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை: Madurai Collector warns coastal residents: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்க ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைகையில் பல கட்டங்களில் நீர் திறக்கப்பட்ட போதிலும் தொடர் மழை வரவின் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக 65அடி அளவுக்கு மேலேயே அணையின் நீர்மட்டம் உள்ளது.

மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, வைகை ஆற்றின் கரையோரமாக உள்ள 5 மாவட்ட மக்களான தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 1ம் தேதி, மதுரை வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலம் மூழ்கியதால், ஆற்றோர சாலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வர உள்ளது.

வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.