Rowdy killed in Chennai: சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை; மனைவி கண்முன்னே வெறிச்செயல்

சென்னை: The incident in which a rowdy was hacked to death near Thiruvanmayur school by mysterious persons has created a stir.. திருவான்மையூர் பள்ளி அருகே ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(35) என்பவர் மர்ம நபர்கள் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் வீட்டிலிருந்து காவல் குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

உடனடியாக அவரது மனைவி, திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, கொலை நடைபெற்ற இடத்திலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கொலையான ஓலை சரவணணன் சமீபத்தில் தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டூவீலர்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(56). திருமணமாகாத இவர், கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக எடை போடும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று சுப்பிரமணியம் தனது டூ வீலரில், நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டூர் பகுதியை சேர்ந்த குருசந்திரன் (24) என்பவர் மற்றொரு டூ வீலரில் வந்தார். இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மொதிக்கொண்டன. இந்த விபத்தில் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

குருசந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் இறந்தார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, குருசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.