Madurai High Court qusttion To Tamilnadu Govt: பொங்கல் பரிசு தொகை அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் (Madurai High Court qusttion To Tamilnadu Govt) தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா என்ற கேள்வியை மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 தரப்படும் என்று கூறப்பட்டது. அதனை சில ரேஷன் அட்டை தாரர்கள் வாங்குவதில்லை அது போன்ற பணத்தை யார் பெறுகின்றார்கள் என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. சில கடைகளில் பணம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறி ஏமாற்று வேலைகளும் நடைபெறுகிறது.

இதனை தடுக்கின்ற நோக்கத்தில் பொங்கல் பரிசாக தரப்படும் ரூ.1,000 ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பணம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுமா என்ற கேள்வியும் ரேஷன் அட்டைதாரர்களிடம் எழுந்துள்ளது.