Bomb Found Near Punjab CM House: பஞ்சாப் முதலமைச்சர் வீட்டின் அருகே வெடிகுண்டு: அதிர்ச்சியில் போலீசார்

சண்டிகர்: பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் வீட்டின் (Bomb Found Near Punjab CM House) அருகாமையில் இன்று (ஜனவரி 2) வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி வருவதற்கு டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் கடுமையாக உழைத்தார். அவரது கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். அதே போன்று அக்கட்சியை சேர்ந்தவரும் நகைச்சுவை பேச்சாளருமான பகவந்த் மான் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

முதலமைச்சர் பகவந்த் மான் கடந்த 1973ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் ஷீமா அருகே உள்ள சதோஜ் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை மகிந்தர் சிங் அரசு ஆசிரியராகவும், தாய் இல்லத்தரசியாகவும் இருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகாமையில் இன்று வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைப்பற்றினர். இது பற்றி வெடிகுண்டு நிபுணர்கள் கூறும்போது, இது வீரியம் குறைந்தது. எனவே இதன் பின்னணி பற்றி ஆராய்வோம் என்றனர். வெடிகுண்டு இருந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.