low pressure area will form on the 5th: வங்கக்கடலில் வரும் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: The Chennai Meteorological Center has informed that a low pressure area will form on the 5th. வரும் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02.12.2022 மற்றும் 03.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

04.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரக்கில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஊத்து (திருநெல்வேலி) 9, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7 சென்டிமீட்டர், கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சிவகிரி (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 6 சென்டிமீட்டர், பர்லியார் (நீலகிரி), கீழ் கோதையாறு (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 5 சென்டிமீட்டர், கடம்பூர் (தூத்துக்குடி), பில்லூர் அணை (கோவை), அமுகரை எஸ்டேட் (நீலகிரி). கயத்தாறு (தூத்துக்குடி), பாபநாசம் (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 3 சென்டிமீட்டர், காயல்பட்டினம் (தூத்துக்குடி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி). தக்கலை (கன்னியாகுமரி). இராஜபாளையம் (விருதுநகர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சிவகாசி (விருதுநகர்), குன்னூர் PTO (நீலகிரி), ராமநாதபுரம் Agro தலா 2 சென்டிமீட்டர், ஆண்டிபட்டி (மதுரை), ராமநாதபுரம், வத்திராயிருப்பு (விருதுநகர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தீர்த்தாண்டானம் (ராமநாதபுரம்), கன்னிமார் (கன்னியாகுமரி), கோத்தகிரி (நீலகிரி). வட்டானம் (ராமநாதபுரம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), திருச்செந்தூர் (தூத்துக்குடி) தலா 1.

மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.