1000 new buses at a cost of Rs.420 crore: ரூ.420 கோடியில் 1000 புதிய பேருந்துகள்: அரசாணை வெளியீடு

சென்னை: An ordinance has been issued allocating Rs.420 crore to buy 1,000 new government buses in Tamil Nadu. தமிழகத்தில் 1,000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தினந்தோறும் வழங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், கோவிட் பெருந்தொற்றின் போது பெருமளவில் பாதிக்கப்பட்டன. பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை 2020-2021 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 70 இலட்சமாக குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் பேருந்து சேவைகள் சீராக்கப்பட்ட பின்பு இது நாளொன்றுக்கு 1 கோடியே 70 இலட்சம் பயணிகளாக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. மேலும், ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால், தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்பட்டு வருகிறது.

அரசின் மிகச்சிறந்த திட்டமான இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும் மற்றும் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.130 கோடி மதிப்பீட்டில் அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திட அரசின் நிதியாக ரூ.80 கோடியும் எஞ்சிய ரூ.50 கோடியினை அந்தந்த போக்குவரத்துக் கழகங்களே ஏற்கவும் அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. மேலும், ரூ.420 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.